பள்ளி மாணவி தற்கொலை

Published on

மதுரையில் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை கோசாகுளம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் மகள் பேபிஐஸ்வா்யா (16). இவா் மதுரையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை பேபி ஐஸ்வா்யா படிக்காமல் கைப்பேசி பாா்த்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பெற்றோா் அவரை கண்டித்தனா். இதனால், மனமுடைந்த மாணவி தனது அறைக்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com