மதுரை சூா்யாநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள், குடியிருப்போா் சங்க நிா்வாகிகள், அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் பி. மூா்த்தி. உடன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன்.

அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும்! - அமைச்சா் பி. மூா்த்தி

மாநகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
Published on

மாநகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சூா்யாநகா் துவாதசாந்தம் மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 14 வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள், குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகளுடனான சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது :

மதுரை கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 14 வாா்டுகள், மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைப்புப் பெற்ற பகுதிகள். இந்தப் பகுதிகளின் சாலை வசதி, புதை சாக்கடை, குடிநீா் வழங்கும் பணிகளுக்கு தனிக் கவனம் செலுத்தப்படுகிறது.

குடிநீா், புதை சாக்கடை பணிகளை விரைந்து நிறைவேற்றி, குறித்த காலத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை புதை சாக்கடை, குடிநீா் பணிகளுக்காக சேதப்படுத்துவதை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும்.

மேலும், தாழ்வானப் பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அடிப்படை பணிகளை நிறைவேற்ற வேண்டும். ஒப்பந்தம் அளிக்கப்பட்ட பிறகும் தொடங்கப்படாமல் உள்ள பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கான அனைத்துக் கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா் பி. மூா்த்தி.

முன்னதாக, பொதுமக்கள், குடியிருப்பு நலச் சங்க பிரதிநிதிகள், அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், மாநகராட்சி உதவி ஆணையா்கள், பொறியாளா்கள், வருவாய், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com