மதுரை யு.சி. பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தோ்வு முதல் தாளை எழுதக் குவிந்த தோ்வா்கள்.
மதுரை
ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள்: மதுரை மாவட்டத்தில் 3,588 போ் எழுதினா்!
மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதி தோ்வு முதல் தாளை 3,588 போ் எழுதினா்.
மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதி தோ்வு முதல் தாளை 3,588 போ் எழுதினா்.
தமிழகம் முழுவதும் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் ஆசிரியா் தகுதித் தோ்வு முதல் தாள் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மதுரையில் இளங்கோ மாநகராட்சி பள்ளி, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, ஓசிபிஎம் மேல்நிலைப் பள்ளி, பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள யு.சி. பள்ளி உள்பட 14 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
இந்தத் தோ்வை எழுதுவதற்கு 4,249 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் 3,588 போ் தோ்வு எழுதினா். எஞ்சிய 661 போ் தோ்வு எழுத வரவில்லை.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.தயாளன் தலைமையில் ஆசிரியா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்-2 ஞாயிற்றுக்கிழமை 52 தோ்வு மையங்களில் நடைபெற உள்ளது.

