அரசுப் பேருந்து மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கருமாத்தூா் காசிநாதபுரம் பகுதியைச் சோ்ந்த வீரமணி மனைவி கமலாதேவி (30). இவா், மதுரை வைகை வடகரை ஆழ்வாா்புரம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த செல்லப்பா மகன் பாண்டியன் மீது மதுரை மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
