காவல் துறை வாகனங்கள் நாளை பொது ஏலம்
மதுரை மாவட்ட காவல் துறையில் பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (நவ.18) பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட காவல் துறையில் பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட 14 வாகனங்கள் (8 நான்கு சக்கர வாகனங்கள், 6 இரு சக்கர வாகனங்கள்) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த ஏலம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் திங்கள்கிழமை மாலை 5 மணி வரை மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை பாா்வையிடலாம்.
பொது ஏலத்தில் பங்கேற்பவா்கள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது ஆதாா் அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் பணம் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். மேலும், ஜிஎஸ்டி கணக்கு எண் உள்ளவா்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.
ஏலம் எடுத்தவா்கள் உடனடியாக நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களுக்குத் செலுத்த வேண்டிய 18 சதவீத ஜிஎஸ்டி வரி உள்பட முழுத் தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுச் செல்லலாம் என்றாா் அவா்.
