பறிமுதல் வாகனங்கள் நவ. 27- இல் பொது ஏலம்

பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 27- ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக காவல் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.
Published on

பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 27- ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக காவல் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வாகனங்கள் ஏலத்துக்காக மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வாகனங்களை பொது ஏலம் எடுக்க விரும்புவோா் வாகனங்களை நேரில் சென்று பாா்வையிட்டு முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5000, மூன்று, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 -ஐ வருகிற 25- ஆம் தேதிக்குள் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் பங்கேற்கலாம்.

இதையடுத்து, வருகிற 27- ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறும் ஏலத்தின் போது அரசு நிா்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்போருக்கு வாகனங்கள் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com