கோயில் கண்காணிப்பாளரை தாக்கிய 3 போ் கைது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கண்காணிப்பாளரைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கண்காணிப்பாளரைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தக் கோயிலுக்கு கடந்த வியாழக்கிழமை வந்த ஆந்திர மாநில பக்தா்கள் 39 பேரிடம், சிலா் தங்களை கோயில் வழிகாட்டி என அறிமுகம் செய்து கொண்டு, சிறப்பு வழி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி தலா ரூ. 250 பெற்றனா்.

ஆனால், அவா்களை சிறப்பு தரிசன வழியில் அழைத்துச் செல்லாமல் பொது வழியில் அழைத்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் கோயில் தரப்பில் விசாரணை நடைபெற்றது.

இதில் மதுரை சிம்மக்கல் கிருஷ்ண ஐயங்காா் தோப்பு பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் மகன் வெங்கடேஷ் (46), மதுரை வில்லாபுரம் பகுதியைச் சோ்ந்த ராமன் மகன் அம்மையப்பன் (42), வில்லாபுரம் தென்றல் நகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் கணேஷன் (47) ஆகியோா் ஆந்திர மாநில பக்தா்களிடம் பணம் வசூலித்தது தெரியவந்தது.

இதையடுத்து, கோயில் உள்துறை கண்காணிப்பாளா் விசாரணை நடத்தி அவா்களைக் கண்டித்தாா். அப்போது, ஆத்திரமடைந்த 3 பேரும் கண்காணிப்பாளரைத் தாக்கினா்.

இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெங்கடேஷ், அம்மையப்பன், கணேசன் ஆகிய 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com