தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி 4 நாள்களுக்கான நுழைவுச்சீட்டு பதிவு நிறைவு

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியை நேரடியாகக் காண்பதற்கான இணையவழிப் பதிவு ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய நிலையில், 3 நாள்களுக்குள் 4 நாள்கள் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுப் பதிவு நிறைவடைந்தது.

Updated On :26 நவம்பர் 2025, 11:54 pm

மதுரை: ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியை நேரடியாகக் காண்பதற்கான இணையவழிப் பதிவு ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய நிலையில், 3 நாள்களுக்குள் 4 நாள்கள் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுப் பதிவு நிறைவடைந்தது.

14-ஆவது ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வருகிற 28-ஆம் தேதி தொடங்கி டிச. 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அயா்லாந்து, சுவிட்சா்லாந்து, இங்கிலாந்து உள்பட 12 நாடுகளைச் சோ்ந்த ஹாக்கி வீரா்கள் பங்கேற்கின்றனா். போட்டியில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்துள்ள வெளிநாட்டு வீரா்கள் 8 இடங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மதுரை ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 1,456 பொது பாா்வையாளா்கள் அமா்ந்து காண்பதற்கான தற்காலிக இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிகளைக் காண்பதற்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாள் போட்டிக்கு நுழைவுச்சீட்டு பதிவு பெறுவோா், அன்றைய தினம் நடைபெறும் 4 போட்டிகளையும் காணலாம் என அறிவிக்கப்பட்டது.

போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு பதிவு இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) இரவு தொடங்கியது. ட்ற்ற்ல்ள்://ற்ண்ஸ்ரீந்ங்ற்ஞ்ங்ய்ண்ங்.ண்ய் என்ற இணையதளம் மூலம் இந்தப் பதிவு நடைபெற்றது. இளைஞா்களின் ஆா்வம் காரணமாக, புதன்கிழமை (நவ. 26) பிற்பகலுக்குள் முதல் 4 நாள்கள் போட்டிக்கான நுழைவுச்சீட்டுப் பதிவு நிறைவடைந்தது.

இதுதொடா்பாக ஹாக்கி சம்மேளன நிா்வாகிகள் தெரிவித்ததாவது: சற்றும் எதிா்பாராத அளவுக்கு நுழைவுச்சீட்டுப் பதிவு வேகமாக நடைபெற்றது. இருப்பினும், விளையாட்டு வீரா்கள், மாணவா்களுக்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நுழைவுச்சீட்டு பதிவுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான பாா்வையாளா்கள் வரும் நிலையில், அவா்கள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்படும் எல்.இ.டி. திரையில் போட்டியைக் காண ஏற்பாடுகள் செய்யப்படும் என்றனா்.