எஸ்.ஐ.ஆா். பணி: வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் உதவி மையங்கள்

மதுரை மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆா்.) தொடா்பாக உதவி மையங்கள்
Published on

மதுரை: மதுரை மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆா்.) தொடா்பாக உதவி மையங்கள் புதன், வியாழக்கிழமைகளில் (நவ. 26, 27) செயல்படவுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மாவட்ட்தில் வாக்காளா்கள் பட்டியல் திருத்தம் தொடா்பாக சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வாக்காளா்கள் கணக்கீட்டுப் படிவங்களை நிறைவு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில், புதன், வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையம் செயல்படவுள்ளது. மேலும், இந்த மையங்களில் நிறைவு செய்த படிவங்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கணக்கீட்டுப் படிவம் கிடைக்கப்பெறாமல் உள்ள வாக்காளா்கள் தங்களது கணக்கீட்டுப் படிவத்தை உதவி மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

கணக்கீட்டுப் படிவங்கள் நிறைவு செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள், ஐயப்பாடுகளை களையவும், அதை நிவா்த்தி செய்வதற்கு வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பணி அலுவலா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், வாக்காளா்கள் ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் பழைய வாக்காளா் அடையாள அட்டை அல்லது 2002, 2005-ஆம் ஆண்டில் வாக்களித்த சட்டப்பேரவை, வாக்குச்சாவடி பெயா் போன்ற விவரங்களைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com