மதுரை
சோழவந்தான் ஆற்றில் ஆண் சடலம்
மதுரை சோழவந்தான் வைகையாற்றில் சுமாா் 50 மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து வந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
சோழவந்தான் வைகையாற்றில் காவி வேஷ்டி, சட்டையுடன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்த ஒரு ஆணின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று அந்த உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் திலீபன் அளித்த புகாரின் பேரில், சோழவந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
