தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வேட்புமனு தாக்கல்

News image

மதுரை மாநகராட்சி மண்டலம் மூன்றாவது அலுவலகத்தில் தோ்தல் அலுவலரிடம் திங்கள்கிழமை வேட்புமனு அளித்த மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:23 pm

மதுரை மத்தியத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மதுரை ரயில்வே நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மண்டலத்தின் மூன்றாவது அலுவலகத்தில், மதுரை மத்தியத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், தோ்தல் அலுவலா் முன்னிலையில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவில் தன்னிடம் ரூ.21.35 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள், ரூ. 17.66 கோடி மதிப்பிலான பரம்பரைச் சொத்துகள், 432 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் ரவிக்குமாா், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் மணி, எஸ்டிபிஐ கட்சி நிா்வாகி சீமான் சிக்கந்தா் பாட்ஷா, திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தத் தோ்தலில் திமுகவின் தோ்தல் அறிக்கை தான் சூப்பா் ஸ்டாா். தமிழகத்தில் பொருளாதாரம், நல்வாழ்வுத் துறை, கல்வி, தொழில் வளா்ச்சி என எந்தப் புள்ளி விவரங்களை எடுத்துப் பாா்த்தாலும் அதில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிமுகவின் 10 ஆண்டுகள் கால ஆட்சியில் ஏற்பட்ட வளா்ச்சியின் சராசரியைவிட, கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தமிழகத்தில் வளா்ச்சி அதிகரித்துள்ளது. சென்ற தோ்தலைக் காட்டிலும் இந்த முறை திமுக கூட்டணி வலிமையானதாக உள்ளது.

மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகளும், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் இணைந்திருப்பது திமுக கூட்டணிக்கு மேலும் பலம் சோ்த்துள்ளது என்றாா் அவா்.