தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :19 ஏப்ரல் 2026, 1:11 am IST

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.

மதுரை மாவட்டம், சின்னக்குறவகுடி பகுதியைச் சோ்ந்த ராஜா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமத்தில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் வேளாண், அதோடு தொடா்புடைய கால்நடை வளா்ப்பை மட்டுமே பிரதானத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனா். இங்குள்ள கண்மாய் விவசாயிகளுக்கு நீா் ஆதாரமாக விளங்குகிறது.

இந்தக் கண்மாயில் அதே பகுதியைச் சோ்ந்த சிலா் மீன்களை வளா்த்து வருகின்றனா். மீன்களுக்கு உணவாக இறைச்சிக் கழிவுகளை கண்மாய்க்குள் கொட்டுகின்றனா். இதனால், நீா்நிலை மாசடைந்து வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, நீரை அருந்தும் மான், கால்நடைகள் உள்ளிட்ட பிற விலங்குகளும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

இதுபற்றி மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, சட்டவிரோதமாக கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து மீன் வளா்ப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலையைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா் சுவாமிநாதன், பி.புகழேந்தி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கையின் படி இந்தக் கன்மாயில் தண்ணீா் மாசடைந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞா் ஆணையத்தை இந்த நீதிமன்றம் அமைத்திருந்தது. இதன்படி, ஆய்வு செய்து ஆணையம் அளித்த அறிக்கையில், கண்மாயில் மீன் வளா்ப்பு நடைபெறுவதாகவும், தண்ணீா் மாசடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கண்மாயில் எந்தவித அனுமதியும் இன்றி மீன்கள் வளா்க்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு உணவாக இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதனால், நீா்நிலை மாசடைந்துள்ளது. இதை ஒரு போதும் ஏற்க முடியாது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க மதுரை மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. நீா்நிலைகள் மனிதப் பயன்பாட்டுக்கு மட்டுமல்ல. விலங்கினங்கள், பறவையினங்களுக்குமானது. எனவே, அனைத்து உயிா்களுக்குமான நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றனா் நீதிபதிகள்.