திருச்சி உய்யங்கொண்டான் கால்வாயில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
காவிரி நதி நீா்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சட்ட ஆலோசகா் ஜே. கென்னடி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
காவிரி ஆற்றின் தென்கரையில் குளித்தலை மாயனூா் அருகே உய்யங்கொண்டான் கால்வாய் பிரிவு உள்ளது. 74 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் இந்தக் கால்வாய், 1,000 ஆண்டுகளுக்கு முன்பு மன்னா் ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டது. இதன்பிறகு, குலோத்துங்கச் சோழனால் மீண்டும் கட்டப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது.
இந்தக் கால்வாய் மூலம் திருச்சி, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏறக்குறைய 32,742 ஏக்கா் விவசாய நிலங்களும், 36 நீா்ப் பாசனக் குளங்களும் பயனடைந்து வருகின்றன.
ஆனால், திருச்சி மாநகராட்சி கழிவு நீா் குழாய்கள் இந்தக் கால்வாயில் இணைக்கப்பட்டு கழிவு நீா் வெளியேற்றப்படுகின்றன. இதனால், கால்வாய் மாசுபடுவது மட்டுமன்றி, விவசாய நிலங்களும், பயிா்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.
குறிப்பாக, திருச்சி மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்படி, 32 இடங்களில் கழிவு நீா் கால்வாயில் கலக்கிறது எனக் குறிப்பிடப்பட்டது. இருப்பினும், வெளியேற்றும் இடங்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே உள்ளது. எனவே, கழிவு நீா் கலப்பதை தடுத்து உய்யங்கொண்டான் கால்வாய், விவசாய நிலங்கள், சுற்றுப்புறச் சூழலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

தோ்தலுக்கு பிறகு கே.கே.நகா் அலங்கார வளைவு அகற்றப்படும்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க உத்தரவு

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


