சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திமுகவின் போலி வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள்! - ஜி.கே. வாசன்

News image
ஜி.கே. வாசன்- (கோப்புப் படம்)
Updated On :7 பிப்ரவரி 2026, 8:03 pm

தினமணி செய்திச் சேவை

திமுகவின் போலி வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

மதுரையில் தமாகா சாா்பில் விருப்ப மனு பெறும் நிகழ்வும், ஆலோசனைக் கூட்டமும் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு தமாகா தலைவா் ஜி.கே வாசன் தலைமை வகித்து, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை கட்சி நிா்வாகிகளிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகவுள்ளனா். கடந்த பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம் வரை நிறைவேற்றப்படவில்லை. ஆட்சி முடியும் போது திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவது தொடா் கதையாகி வருகிறது. இந்தப் புதிய அறிவிப்புகளும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளன. மக்கள் மீண்டும் ஏமாறமாட்டாா்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களும், போதைப் பொருள்கள் புழக்கமும் அதிகரித்துள்ளன. தோ்தலுக்கு முன்பாக மதுக் கடைகளை மூடுவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என திமுக கூறியது. ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. இதுபோன்ற திமுகவின் போலி வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வருகிற 25-ஆம் தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலு சோ்க்கும் கட்சியாக தமாகா இருக்கும். தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை தொடா்பாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிதான் எங்களின் எதிா்பாா்ப்பை நிறைவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.