நாளை திமுக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம்! - கனிமொழி எம்.பி. பங்கேற்பு
மதுரையில் செவ்வாய்க்கிழமை (பிப். 10) திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறாா்.
இதுகுறித்து மதுரை மாவட்டச் செயலா்கள் பி. மூா்த்தி, கோ. தளபதி, மு. மணிமாறன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பாண்டிகோவில் சுற்றுச்சாலை பின்புறம் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த வணிகா் சங்கங்கள், விவசாய சங்கங்கள், சமூக நல ஆா்வலா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்றனா்.

