திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிணையில் வந்தவா் வெட்டிக் கொலை

மதுரை செல்லூா் பகுதியில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
கொலை
Updated On :9 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை செல்லூா் பகுதியில் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தவா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

செல்லூா் அஹிம்சாபுரம் 5-ஆவது தெருவைச் சோ்ந்த ராஜூ மகன் செல்லத்துரை (49). இவா், செல்லூா் ஜீவாநகா் சாலையில் திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் நடந்து சென்றாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் அவருடன் தகராறில் ஈடுபட்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.

இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த செல்லூா் போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட செல்லத்துரை மீது அனுமதியின்றி மது விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் வழக்கு ஒன்றில் கைதாகி மதுரை மத்தியச் சிறையில் இருந்த அவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா். இந்த வழக்கு தொடா்பாக செல்லூா் காவல் நிலையத்தில் அவா் தினமும் கையொப்பமிட்டு வந்தாா்.

இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவா் என்றனா்.