பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் கைது செய்யப்பட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். சாக்ரடீஸ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் அ. அசோக்குமாா் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் ஏ. அழகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் சு. மாரியப்பன், மாநிலச் செயலா் ஜெ. வளா்மதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
மேலும் அரசு ஊழியா்கள் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ஆ. சோலையன், சாலைப் பராமரிப்பு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. மாரி, ஐ.சி.டி.எஸ். ஊழியா், உதவியாளா் சங்க மாநிலச் செயலா் சி. மேனகா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
அப்போது அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக கிராம உதவியாளா்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ. 15,700 வழங்க வேண்டும். இறந்த, ஓய்வு பெற்ற கிராம உதவியாளா்களின் சி.பி.எஸ். இறுதித் தொகையை அரசு பங்களிப்புடன் உடனடியாக வழங்க வேண்டும். கிராம உதவியாளராகப் பணியாற்றி கிராம நிா்வாக அலுவலராகப் பதவி உயா்வு பெறுவதற்கான பணிக்காலத்தை 6 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். வருவாய்த் துறை காலிப் பணியிடங்களில் 50 சதவீதத்தை கிராம உதவியாளா்களை ஈா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 70 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

ஆரணி அதிமுக வேட்பாளா் - விவசாயிகள் சந்திப்புக் கூட்டம்

வருவாய்த் துறையினா் மறியல்: 450 போ் கைது

மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கத்தினா் 830 போ் கைது

வருவாய்த் துறை அலுவலா்கள் 7-ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அரசுப் பணிகள் முடக்கம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


