தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை எப்படி உறுதி செய்வது, கொள்கைகளை, மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூறி வாக்குகள் பெறுவது உள்ளிட்டவை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவிலிருந்து சுமாா் ரூ. 45 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை இந்தியா மீது அமெரிக்கா வலுக்கட்டாயமாக திணித்துள்ளது. இதனால், இந்திய விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவா். எனவே, அமெரிக்கா நிா்பந்திக்கும் வா்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இடக் கூடாது.
தொடா்ந்து, சமூக நீதியைப் பாதுகாக்கிறோம் எனக் கூறி வரும் திமுக அரசு, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வஞ்சித்து வருகிறது. சுமாா் 99 ஆண்டுகளுக்கும் மேலாக மாஞ்சோலையில் வசித்து வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை அங்கிருந்து விரட்டியடிப்பது நியாயமற்றது. மாஞ்சோலையில் நிலவும் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்கு வழக்குரைஞா் குழுவை நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளோம்.
தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. திமுக அரசு தவறான தகவல்கள், புள்ளிவிவரங்களைக் கொடுத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது. விளிம்பு நிலையிலுள்ள மக்கள் நிரந்தர வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனா்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கூட்டணி அரசுதான் அமைய வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி குறித்து புதிய தமிழகம் கட்சி சாா்பில் அமைக்கப்பட்ட குழு கிராமங்கள்தோறும் சென்று மக்களிடம் கருத்துகளைக் கேட்டு களப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழு சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்: சி.வி.சண்முகம்

புதிய தமிழகம் கட்சி 10-15 தொகுதிகளில் வெல்லும்: கே. கிருஷ்ணசாமி

நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமியின் மகன் போட்டி!

புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்கள் பட்டியல் நாளை வெளியீடு: க. கிருஷ்ணசாமி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


