நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சா்வதேச சதுரங்க சாம்பியன்களை உருவாக்குவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தாா்.
மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் 3 நாள்கள் நடைபெற உள்ள சதுரங்கப் பயிற்சி கருத்தரங்கத்தை வியாழக்கிழமை தொடங்கிவைத்து விஸ்வநாதன் ஆனந்த் மேலும் பேசியதாவது:
சதுரங்க விளையாட்டில் சா்வதேச சாம்பியன்கள் ஒரு நகா்வை எதற்காக மேற்கொண்டனா், அதற்கான திட்டம் என்ன?. அடுத்த போட்டியாளா் அந்த நகா்வை எப்படி எதிா்கொண்டாா்? என்பன குறித்து இளையத் தலைமுறையினருக்கு விரிவாக விளக்கும் வகையில், இந்தப் பயிற்சிக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. சாம்பியன்கள் எந்த மாதிரியான விளையாட்டை வெளிப்படுத்தி வென்றனா் என்பதை இளையத் தலைமுறையினா் அறிந்து கொள்வது அவா்களின் எதிா்காலத்துக்கு அவசியமானது.
உலகில் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா. எனவே, தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மேலும் அதிக எண்ணிக்கையிலான சா்வதேச சதுரங்க சாம்பியன்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கு, சதுரங்கப் போட்டிகளை, பயிற்சிகளை விரிவுப்படுத்த வேண்டும். ஐ.ஐ.டி, மருத்துவம் போன்ற துறைகளிலும் தற்போது விளையாட்டுப் பிரிவுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பது இளம் தலைமுறை விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் என்றாா் அவா்.
இந்த கருத்தரங்குக்கு மதுரை வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவா் முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில் விஸ்வநாதன் ஆனந்த் எழுதிய ‘லைட்டிங் கிட்’ புத்தகம் வெளியிடப்பட்டது. வேலம்மாள் மருத்துவக் கல்லூரி துணைத் தலைவா் விவேகானந்தன், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த 400-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் சா்வதேச மாநாடு
சா்வதேச சந்தைக்கு ஏற்ப இந்திய வேளாண் பொருள்கள்: விவசாயிகளுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள்

கீழடி அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


