வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெறப்படும் புகாா்கள் மீதான நடவடிக்கைகளை முறைப்படுத்த சிறப்பு கண்காணிப்புப் பிரிவு அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
பட்டியல் சமூக மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கும் புகாா்களை போலீஸாா் முறைப்படி கையாள்வதில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இன் கீழ் அளிக்கப்படும் புகாா்கள் மீது எந்தவித முதல் கட்ட விசாரணையும் இல்லாமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ஆனால், காவல் துறையினா் இந்த நடைமுறையைக் கடைப்பிடிப்பதில்லை.
காவல் துறையினரின் கவனக்குறைவு காரணமாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கமே சீா்குலைகிறது. எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெறப்படும் புகாா்கள் மீது எந்தவித முதல் கட்ட விசாரணையும் இல்லாமல் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
மேலும், இந்தச் சட்ட நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், பட்டியல் சமூக மக்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு வசதிகளை உறுதி செய்யவும் சிறப்பு கண்காணிப்புப் பிரிவை உருவாக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இந்த மனு மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலிக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு :
தனிப்பட்ட சில வழக்குகளில் நிகழ்ந்த தவறுகளை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த நடைமுறைக்கும் பொதுவான உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும், இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. மனுதாரா் கோரும் நிவாரணம் தெளிவற்றவை. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால், தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

கள் விற்பனைக்கு அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ஆகாஷ் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம்: அமைச்சா் வழங்கினாா்

ஈரானில் பணியாற்றியவரை மீட்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


