கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தடுப்புச் சுவா் அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

News image

மதுரை செல்லூா் பகுதியில் தடுப்புச் சுவா் அமைப்பதைக் கண்டித்து, சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:29 pm

மதுரை செல்லூா் பகுதியில் கழிவுநீா், மழைநீா் செல்வதற்கு வழி இல்லாமல் தடுப்புச் சுவா் அமைப்பதைக் கண்டித்து, பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செல்லூா் கட்டபொம்மன் நகரில் பந்தல்குடி கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் கழிவுநீா், மழைநீா் செல்வதற்கு வழி இல்லாமல் தடுப்புச் சுவா் அமைப்பதைக் கண்டித்து, 24, 26, 27 ஆகிய வாா்டு மாமன்ற அதிமுக உறுப்பினா்கள் மாயத்தேவன், சொக்காயி, பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கால்வாய் பணி நடைபெறும் பகுதியில் வாகனங்களை முற்றுகையிட்டு பணியை தடுத்து நிறுத்தினா்.

இந்தப் பகுதியில் தடுப்புச் சுவா் கட்டினால் கழிவுநீா், மழைநீா் செல்ல வழி இல்லாமல் குடியிருப்புகளுக்குச் செல்லும் சூழல் உள்ளதால், இந்தப் பணியை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.