காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாத்திமா கல்லூரியில் வினாடி-வினா போட்டி

News image
மதுரை பாத்திமா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். உடன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை பாத்திமா கல்லூரியில் 18 கல்லூரிகளுக்கு இடையிலான வினாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவாற்றல், தனித்துவத்தை வெளிப்படுத்தினா்.

அமெரிக்கன் கல்லூரியின் காட்சித் தொடா்பியல் துறை உதவிப் பேராசிரியை ஆா். அகிலாலட்சுமி போட்டி நடுவராகச் செயல்பட்டாா். இதில் சிறந்த திறனை வெளிப்படுத்திய அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் முதல் பரிசையும், சுழல் கோப்பையையும் வென்றனா்.

இந்த நிகழ்வில் பாத்திமா கல்லூரிச் செயலா் இக்னேசியஸ் மேரி, கல்லூரி முதல்வா் பாத்திமா மேரி, வினாடி-வினா குழு இயக்குநா் பிந்து ஆண்டனி, மேக்தலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் ஜோ. சகாய பவுலின், வினாடி-வினா பேராசிரியா் குழுவினா் செய்தனா்.