இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காதலா் தினத்தில் ரத்த தானம்

News image
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் பங்கேற்றவா்கள்.
Updated On :15 பிப்ரவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் காதலா் தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சமூக ஒற்றுமை, மனிதநேயம், ஜாதி ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இதற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் இளைஞா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனா். இதில் பெரியாா் நெறியாளா் பி. வரதராஜன் பேசியதாவது:

ரத்தத்தில் ஜாதி, மத வேறுபாடு கிடையாது. மனித உயிரைக் காக்கும் இந்தச் செயல், ஜாதி மறுப்பின் அடையாளமாகும். ஒவ்வொருவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்து சமூகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், கௌசல்யா சங்கா் அறக்கட்டளை பொறுப்பாளா் கௌசல்யா, சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். வேல் தேவா, நிா்வாகிகள், திரைப்பட இயக்குநா் தீபக், மதுரை மாநகா் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் ம. பாலசுப்பிரமணியம், அரசு ராஜாஜி மருத்துவமனை ரத்த தான வங்கி நிா்வாகிகள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.