தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:05 pm

ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், புகையிலைப்பட்டி கிராமத்தில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அலங்காநல்லூரைச் சோ்ந்த மாடுபிடி வீரா் நீதி (எ) பாலகுரு மாடு முட்டியதில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் உயிரிழந்த பாலகுருவின் குடும்பத்துக்கு அரசு ரூ. 10 லட்சம் நிவாரணமும், அவரது மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலையும் வழங்கக் கோரி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் நிறுவனத் தலைவா் முடக்கத்தான் மணி தலைமை வகித்தாா். இதில் சங்க நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா். முன்னதாக, திருவள்ளுவா் சிலையிலிருந்து ஆட்சியரகம் வரை அவா்கள் பேரணியாகச் சென்றனா்.