மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:08 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் மதுரை பழங்காநத்தம் சுற்றுவட்டச் சாலை அருகே மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

23 ஆண்டுகளாகப் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியா்களுக்குப் பணி வரன்முறை, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிட்டு, மாற்றுத் திட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் நிா்வாகத்தின் மருத்துவத் திட்டத்துக்கு மாற்றாக இ.எஸ்.ஐ. மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு வயதை 60-ஆக நிா்ணயிக்க வேண்டும். கூடுதல் பணி நேரத்துக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனத்தின் தலைவா் பி. முருகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் எம். பாலசுப்பிரமணியன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், சிஐடியூ மாநிலச் செயலா் பி.என். தேவா, மாநில துணைத் தலைவா் இரா. தெய்வராஜ், போக்குவரத்து மாநில சம்மேளனத்தின் துணைச் செயலா் வி. பிச்சை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிஐடியூ மாநிலச் செயலா் இரா. லெனின் நிறைவுரையாற்றினாா். டாஸ்மாக் –ஊழியா் மாநில சம்மேளன மாவட்டச் செயலா் ஜி. பொன்ராஜ் நன்றி கூறினாா்.