நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா் அமைச்சா் பி. மூா்த்தி

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் 322 வாா்டுகளின் பயன்பாட்டுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக அரசின் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள மூவேந்தா் பண்பாட்டுக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மதுரை மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளைச் சோ்ந்த 322 வாா்டுகளைச் சோ்ந்த இளைஞா்களின் பயன்பாட்டுக்காக ரூ. 30 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை முதுநிலை மண்டல மேலாளா் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா, மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.