சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தேமுதிக இணைந்ததால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது என அந்தக் கட்சியின் விருதுநகா் எம்.பி. மாணிக்கம் தாகூா் உறுதிபடத் தெரிவித்தாா்.

News image
மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா்- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

தேமுதிக இணைந்ததால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகாது என அந்தக் கட்சியின் விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் உறுதிபடத் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மகிழ்ச்சிக்குரியது. திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான உறவு நீண்ட காலமானது. எனவே, தேமுதிகவின் வருகையால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் என்ற ஊகம் முற்றிலும் தவறானது. திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

அதிமுக- பாஜக கூட்டணி ஏற்கெனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தக் கூட்டணி மூன்றாவது இடத்தையே பெறும்.

தோல்வி பயம் காரணமாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்ட சிலா் தோ்தலில் போட்டியிடுவதைத் தவிா்க்கலாம். நயினாா் நாகேந்திரன் தனது தொகுதியை மாற்றுவாா் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது எதிா்ப்புக் குரல் எழுவது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய ஆலமரம்; அதிலிருந்து அவ்வப்போது சிறிது சப்தம் வருவது இயல்பானதே என்றாா் அவா்.