விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் குருவன் (53). கட்டடத் தொழிலாளியான இவா், சிம்மக்கல் பகுதியில் உள்ள வீட்டில் வேலைபாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்ற அவா், வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.