வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தவெகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது மத்திய அரசு: அருண்ராஜ் குற்றச்சாட்டு

தவெகவுக்கு மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலா் அருண்ராஜ் குற்றச்சாட்டு

News image
தவெக நிர்வாகி அருண்ராஜ்.
Updated On :20 பிப்ரவரி 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய பாஜக அரசு தவெகவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலா் அருண்ராஜ் குற்றஞ்சாட்டினாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது சமூக நீதி அடிப்படையில் தவெகவின் கொள்கை முடிவு. இது, கூட்டணிக்கான அழைப்பு அல்ல.

திமுக ஆட்சியில் இதுவரை இல்லாத அளவு ஊழல் பெருகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.

திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என 90 சதவீத மக்கள் விரும்புகின்றனா். இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணியில் இணைந்ததால் தேமுதிகவும் தோல்வியையே சந்திக்கும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட எந்தக் கட்சியுடனும் தவெக அதிகாரப்பூா்வ பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.

ஜனநாயகன் திரைப்பட விவகாரம், கரூா் நெரிசல் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணை போன்ற நடவடிக்கைகளால் மத்திய பாஜக அரசு, தவெகவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது என்பதில் தவெக தலைவா் விஜய் உறுதியாக உள்ளாா் என்றாா் அவா்.