கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

News image
மதுரை அமெரிக்கன் கல்லூரி முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி உதவிப் பேராசிரியா்கள்.
Updated On :22 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை அமெரிக்கன் கல்லூரி முன் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இரண்டாவது நாளாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியா்கள் சங்கத்தின் 34-ஆவது மாநாட்டில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரி முன் உதவிப் பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 5 ஆண்டுகளாக அரசு உதவிப் பெறும் கல்லூரி உதவிப் பேராசிரியா்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும். அரசுக் கல்லூரி, அரசு உதவிப் பெறும் கல்லூரி என பாகுபாடு காட்ட வேண்டாம் என முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.