மடப்புரம் கோயில் காவலாளி வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுதொடா்பாக அஜித்குமாரிடம் தனிப் படைக் காவலா்கள் விசாரணை நடத்தினா். அப்போது, தனிப் படைக் காவலா்கள் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா். இதையடுத்து, தனிப் படைக் காவலா்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
மேலும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவல் வாகன ஓட்டுநரான தனிப் படைக் காவலா் ராமச்சந்திரன், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளா் சிவக்குமாா், தலைமைக் காவலா் இளையராஜா ஆகியோா் கூடுதலாகச் சோ்க்கப்பட்டனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மனுதாரா் சோ்க்கப்பட்டாா். அவா் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவாா். மேலும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படத் தயாராக உள்ளாா். அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, மனுதாரருக்கு முன்பிணை வழங்க வேண்டும் என்றாா்.
இதற்கு சிபிஐ தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரும் நிவாரணத்தை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழப்பு: மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


