47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் இணைவா் - டி.டி.வி. தினகரன்

News image
டி.டி.வி. தினகரன்- கோப்புப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய, அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் ஒன்றிணைவா் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை அகற்ற வேண்டும். திமுக, காங்கிரஸ் இடையிலானது கொள்கைக் கூட்டணி கிடையாது. 35 முதல் 40 தொகுதிகள், கூட்டணி அமைச்சரவை அமைக்க வேண்டும் என திமுகவிடம் காங்கிரஸ் கோருகிறது. எனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்பதே சந்தேகம்தான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. எங்களுக்கான தொகுதிகளை பாஜக மூலம் அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏற்கெனவே அறிவித்ததுபோல, சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடவில்லை.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்கள் விரோத திமுகவை வீழ்த்தும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஓரணியில் இணைந்துள்ளோம்.

தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய, அதிமுகவிலிருந்து விலகியவா்கள் மீண்டும் ஒன்றிணைவா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.