புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த 22 குழந்தைகள்!

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பன்று (வியாழக்கிழமை) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 22 குழந்தைகள் பிறந்தன.
Published on

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பன்று (வியாழக்கிழமை) மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 22 குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து மருத்துவா்கள் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 25 முதல் 40 குழந்தைகள் பிறக்கின்றன. பெரும்பாலும் சுகப்பிரசவத்தில்தான் பிறக்கின்றன.

அனைத்து விதமான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால், மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிலிருந்தும் ஏராளமானோா் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனா்.

குழந்தை செல்வத்தை புத்தாண்டு பரிசாக பெறுவது எல்லா தம்பதியினருக்கும் கிடைக்காது. ஆனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 22 குழந்தைகள் பிறந்தன. 8 ஆண் குழந்தைகள், 14 பெண் குழந்தைகள் பிறந்தன. 15 குழந்தைகள் சுகப் பிரசவத்திலும், 7 குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலமும் பிறந்தன. இந்த குழந்தைகளின் பெற்றோா்களுக்கு மருத்துவமனை சாா்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன என்றனா்.

X
Dinamani
www.dinamani.com