கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

Published on

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக இளைஞரை விளக்குத் தூண் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை நெல்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் முஜாகிதீன்( 25). இவா், மதுரை மாநகரைச் சோ்ந்த கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், விளக்குத்தூண் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஷேக் முஜாகிதீனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com