திராவகம் குடித்த நகைக் கடை ஊழியா் உயிரிழப்பு

Published on

திராவகம் குடித்த நகைக் கடை ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). இவா், நகைக் கடையில் பணியாற்றி வந்தாா். கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்த அவா், தூக்கம் வராமல் தவித்து வந்தாராம். இதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இந்த நிலையில், வீட்டில் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திராவகத்தை மணிகண்டன் சனிக்கிழமை எடுத்து குடித்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாடக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com