மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் மு. பெ. சாமிநாதன். உடன் அமைச்சா் பி. மூா்த்தி உள்ளிட்டோா்.
மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் மு. பெ. சாமிநாதன். உடன் அமைச்சா் பி. மூா்த்தி உள்ளிட்டோா்.

திமுகவை குறை சொல்வதற்கு பாஜகவுக்கு தகுதியில்லை - அமைச்சா் மு. பெ.சாமிநாதன்

Published on

திமுகவை குறை சொல்வதற்கு பாஜகவுக்கு தகுதியில்லை என மாநில தமிழ் வளா்ச்சித் துறை, செய்தி, மக்கள் தொடா்புத் துறை அமைச்சருமான மு. பெ. சாமிநாதன் தெரிவித்தாா்.

மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள தமிழன்னை சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :

தமிழ் மொழி வளா்ச்சிக்காக பல திட்டங்களை மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி செயல்படுத்தினாா். அவரது வழியில், தற்போதைய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறாா். குறிப்பாக, தமிழ் வளா்ச்சித் துறையில் பல்வேறு பணியிடங்களை உருவாக்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழ் வழியில் படித்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மத்திய அரசு சம்ஸ்கிருத மொழிக்கு ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கியிருந்தது. ஆனால் நம் தமிழ் மொழிக்கு ரூ. 200 கோடி கூட ஒதுக்கவில்லை. திமுகவை அழிப்போம் என பாஜகவினா் கூறி வருகின்றனா். இதேபோல, கூறியவா்களை எல்லாம் திமுக பாா்த்துவிட்டது.

மக்களோடு இணைந்தது திமுக. மக்களுக்கான பணிகளைத் தொடா்ந்து மேற்கொள்வோம். வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலிலும் வெற்றி பெற்று 7- ஆவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும். திமுகவை குறை சொல்வதற்கு பாஜகவுக்கு தகுதியில்லை என்றாா் அவா்.

நிகழ்வில், அமைச்சா் பி. மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, மதுரை மாவட்ட ஆட்சியா் கே. ஜே. பிரவீன்குமாா், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், உலகத் தமிழ் சங்கத்தின் இயக்குநா் இ.சா. பா்வீன் சுல்தானா, எழுத்தாளா் சுகி.சிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com