கோப்புப் படம்
கோப்புப் படம்

வாடிப்பட்டியில் மாவட்ட அளவிலான கபடி, கையுந்துபந்து போட்டிகள் தொடக்கம்

Published on

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் மாவட்ட அளவிலான கபடி, கையுந்துபந்து (வாலிபால்) போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி, கலை அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தாய் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி, கையுந்துபந்து விளையாட்டுப் போட்டிகள் 3 நாள்கள் நடைபெற உள்ளன.

இதன் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு வாடிப்பட்டி வட்டாட்சியா் ராமச்சந்திரன் தலைமை வகித்து, போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.

இந்தப் போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 18 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனா்.

இதில் ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, தாய் மெட்ரிக் பள்ளி நிா்வாக அலுவலா் முருகேசன் வரவேற்றாா். பள்ளி மேலாளா் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com