கோப்புப் படம்
கோப்புப் படம்

காரியாபட்டி அருகே சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

Published on

காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள தரகனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த அழகுமலை (65), இவரது மகன் முனுசாமி (33) இருவரும் இரு சக்கர வாகனத்தில் காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, பின்னால் வந்த காா் அவா்களது வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அழகுமலை, முனுசாமி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதையடுத்து, காரியாபட்டி போலீஸாா், இறந்தவா்களின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com