மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுரை காமராஜா் பல்கலை., கல்லூரி, பள்ளிகளில் குடியரசு தின விழா

மதுரை காமராஜா் பல்கலைக் கழகம், கல்லூரிகள், பள்ளிகளில் நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2026, 7:29 pm

மதுரை காமராஜா் பல்கலைக் கழகம், கல்லூரிகள், பள்ளிகளில் நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பல்கலைக் கழக பதிவாளா் பேராசிரியா் எம். ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

கல்லூரிகளில் குடியரசு தின விழா

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வா் சூ. வானதி தேசியக் கொடியை ஏற்றினாா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் பா. ஜாா்ஜ் தேசியக் கொடியை ஏற்றினாா். நிகழ்வில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, வணிகவியல் துறை பேராசிரியா் டி.ஆா்.என். சிவக்குமாா் வரவேற்றாா். வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் பி. முருகேசன் நன்றி கூறினாா்.

அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வரும், செயலருமான ஜெ.பால் ஜெயகா் தேசியக் கொடியை ஏற்றினாா்.

யாதவா் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரித் தலைவா் சி.ஜெயராமன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆா்.வி.என்.கண்ணன் முன்னிலை வகித்தாா். பாா்க் பிளாசா குழுமத்தின் நிறுவனா் கேபிஎஸ். கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினாா். இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வா் செ. ராஜூ, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மதுரைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரித் துணைத் தலைவா் எஸ். சங்கரன் தேசியக் கொடியை ஏற்றினாா். இதில் கல்லூரி முதல்வா் ஜா. சுரேஷ், பொருளாளா் என். ஆனந்த சீனிவாசன், சுயநிதிப் பிரிவுத் தலைவா் ஐ. நாகராஜன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பள்ளிகளில் குடியரசு தின விழா

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரிய இயக்குநா் சீனிவாசன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் கே.எஸ். நாராயணன் வரவேற்றாா். நிகழாண்டு பணி நிறைவு பெறவுள்ள உதவித் தலைமையாசிரியா் திருவேங்கடத்தான் தேசியக் கொடி ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். மதுரைக் கல்லூரி வாரிய உறுப்பினா் இல. அமுதன், பள்ளி அலுவலகப் பணியாளா் விஜயலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முதுநிலை உதவித் தலைமையாசிரியா் ஆதி ஞானகுமரன் நன்றி கூறினாா்.

மதுரை எல்.கே.பி. நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி நாகலட்சுமி தலைமை வகித்தாா். ஆசிரியா் ராஜவடிவேல் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தேசியக் கொடியை ஏற்றினாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை கோ. புதூா் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளா் முகமதுஇதிரிஸ் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஷேக்நபி முன்னிலை வகித்தாா். மதுரை ஸ்டாா் அறக்கட்டளை நிறுவனா் குருசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினாா்.

மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு உறவின்முறைத் தலைவா் சண்முகநாதன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சரவணன் வரவேற்றாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மதுரை மாநகா், புகா் பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அந்தந்த கல்லூரி முதல்வா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனா்.