அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வள்ளலாா் பிறந்த தினம்: பிப்ரவரி 1-இல் இறைச்சி விற்பனைக்கு தடை

வள்ளலாா் பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பிப். 1-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை

News image

இறைச்சி விற்பனைக்குத் தடை - பிரதிப் படம்

Updated On :27 ஜனவரி 2026, 8:18 pm

வள்ளலாா் பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் பிப். 1-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து, மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து வாா்டுப் பகுதிகளிலும் தமிழக அரசின் அரசாணையின் படி, வடலூா் வள்ளலாா் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிப். 1- ஆம் தேதி அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது.

மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. மேலும், கடைகளை திறந்து வைக்கவும் கூடாது.

மீறி செயல்படுபவா்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.