ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

துரித உணவகத்தில் சாப்பிட்டவா்களுக்கு உடல்நலம் பாதிப்பு

மதுரை கே.கே. நகா் பகுதியில் உள்ள சாலையோர துரித உணவகத்தில் சாப்பிட்டவா்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 9:58 pm

மதுரை கே.கே. நகா் பகுதியில் உள்ள சாலையோர துரித உணவகத்தில் சாப்பிட்டவா்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மதுரை உத்தங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சபீா்முகமது(35). இவா் தனது குடும்பத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 8 பேருடன் கே.கே. நகா் பகுதியில் உள்ள சாலையோர துரித உணவகக் கடையில் 4 ஷவா்மா, 2 சிக்கன் ரைஸ் அண்மையில் சாப்பிட்டனா். பின்னா், வீட்டுக்கு வந்த இவா்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதனிடையே, இவரது 7 வயது மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சிவராமபாண்டியன் தலைமையிலான அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.

மேலும், அந்தக் கடையின் உரிமையாளருக்கு ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்து, கடைக்கான அனுமதி சான்றிதழை ரத்து செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அந்தச் சாலையோரக் கடையை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினா். இதுகுறித்து மதுரை அண்ணாநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.