ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா

தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை  உடனடியாக ரத்து வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை  உடனடியாக ரத்து வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் சனிக்கிழமை திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் பகுதியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இ.லூர்துராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான செயலர் மு.அய்யப்பன் போராட்டத்தை துவக்கி வைத்தார்.

 ஆறாவது ஊதியக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு  உடனடியாக வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமைப்படி  ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், பகுதி நேர தொழிற்கல்வி சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும், கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினார்.

 மாவட்டச் செயலர் செ.காளிமுத்து வரவேற்றார், பெருளாளர் யா.பீட்டர்ராஜ் நன்றி கூறினார். 150க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் உள்ளிட்ட 230க்கும் மேற்பட்ட  ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com