வத்தலகுண்டு அருகே மாட்டுவண்டி பந்தயம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை மாநில அளவிலான மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை மாநில அளவிலான மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

 பந்தயத்தை திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் முரளிதரன் முன்னிலை

வகித்தார்.   நகர செயலாளர்கள் கென்னடி, சின்னதுரை, முன்னாள் பேரூராட்சி தலைவர் காமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆறு பிரிவுகளாக நடந்த போட்டிகளில் பெரியமாட்டுவண்டி பிரிவில் தேனி கேஎம் பட்டி சக்தி என்பவரது வண்டி முதலிடம் பெற்றது. இரண்டாம் இடத்தை மதுரை மேலமடை சீமான் வண்டியும், மூன்றாம் இடத்தை மதுரை கல்லனை ரவி வண்டியும் பெற்றன.

 பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பரிசுகள் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com