பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

வேடசந்தூர் வட்டத்தில் 100 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டம்

வேடசந்தூர் வட்டத்தில் 100 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Updated On :

வேடசந்தூர் வட்டத்தில் 100 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆட்சியர் த.ந.ஹரிகரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.மு.நாகேந்திரன், இணை இயக்குநர் (வேளாண்மை) ந.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 40 ரோட்ட வேட்டர் கருவிகளும், 8 விதைப்பு கருவிகளும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. 50 சதவீத மானியத்தில் இந்த கருவிகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

 அதேபோல் 13 பவர் டில்லர்கள் வரப் பெற்றுள்ளன. சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு ரூ.75ஆயிரம், இதர விவசாயிகளுக்கு ரூ.60ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

 மண் வளத்தை பாதுகாக்கும் வகையில், பசுந்தாள் உரம் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு, ஹெக்டேருக்கு ரூ.2000 வீதம் மானியம் வழங்கப்படும். தேசிய நீடித்த வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ், வேடசந்தூர் வட்டாரத்தில் 100 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு ஒரு கறவை மாடு, அல்லது 10 ஆடுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் உளுந்து மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் சம்பத்குமார் தெரிவித்தார்.

கூட்டத்தில் கோம்பை பகுதி விவசாயி ராமசாமி பேசியதாவது: வங்கி கடன் தொகையை அரசு தள்ளுபடி செய்தபோதும், கோவிலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகம் விவசாயிகளின் நில ஆவணங்களை தர மறுத்து வருகிறது. ஆவணங்களை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.