ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கவனத்திற்கு...

வங்கி  போட்டித் தேர்வில் வெற்றி பெறும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு, தனியார் பயிற்சி மையத்தில் பயின்றதற்கான கட்டணத் தொகை

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:21 am

DIN

வங்கி  போட்டித் தேர்வில் வெற்றி பெறும் முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு, தனியார் பயிற்சி மையத்தில் பயின்றதற்கான கட்டணத் தொகை அதிகபட்சமாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்திருப்பதாவது: வங்கி பணிக்கான போட்டி தேர்வு டிச.2, 3, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் தேர்ச்சி பெற்றால், தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படித்ததற்கான கட்டணத் தொகை வழங்கப்படும்.  தேர்ச்சி பெற்றதற்கான அசல் சான்று மற்றும் பயின்ற பயிற்சி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட அசல் ரசீது ஆகியவற்றுடன், திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநரிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விதிமுறைகளுக்குள்பட்டு ரசீதில் உள்ள தொகை (அல்லது) அதிகபட்ச பயிற்சி கட்டணத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, வங்கிப் போட்டித் தேர்வுகளில் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.