மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கொடைக்கானலில் சுழற்சங்கம் சார்பில் விருது வழங்கல்

கொடைக்கானலில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு சுழற்சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஏரிச்சாலையிலுள்ள உணவகத்தில் நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:40 am IST

கொடைக்கானலில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு சுழற்சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஏரிச்சாலையிலுள்ள உணவகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சுழற்சங்கத் தலைவர் ரோகன் சாம்பாபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுழற்சங்க ஆளுநர் கோபாலகிருஷ்ணன், கொடைக்கானல் பகுதியில் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பெரா ஜான், கோடை சுத்தம் சமூக ஆர்வலர் அப்பாஸ், இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவித்து வரும் காவல்துறையைச் சேர்ந்த ஜான் ஆகிய 3 பேருக்கு விருதுகளை வழங்கிப் பேசினார். இதில் ரோட்டரி இன்ட்ராடிக் கிளப்பைச் சேர்ந்த பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் சார்பில் ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிக்கு கழிப்பறை கட்டுவதற்கு நிதியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுழற்சங்க முன்னாள் ஆளுநர் சாம்பாபு, சுழற்சங்கத்தைச் சேர்ந்த ஆசாத், சுகுமார்,  ராமன் ராஜ்குமார், தனசேகர், ராபின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.