மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள்: ஏப்.10 வரை அணிகள் பதிவு

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி லீக் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணியினர், ஏப்.10 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:58 am IST

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி லீக் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணியினர், ஏப்.10 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த ஹாக்கி சங்கத்தின் செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஹாக்கி சங்கத் தலைவர் என்.எம்.பி.காஜாமைதீன் தலைமை வகித்தார். 
கூட்டத்தில், ஹாக்கி சங்கத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகம் அமைக்க வேண்டும். 2018-19ஆம் ஆண்டுக்கான ஹாக்கி லீக் போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பின், ஹாக்கி லீக் போட்டிகள் நடத்துவது தொடர்பாக என்.எம்.பி.காஜாமைதீன் தெரிவித்ததாவது: மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள் ஏப்.22 ஆம் தேதி தொடங்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு, மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகியவற்றில் தனித்தனியாக நடைபெறும்.
 இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அணியினர், ஏப்.10ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.  லீக் போட்டிக்கான பதிவுக்கு, பி.ஜோதிமுருகனை, 9965544461, 0451-2433231 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில், ஹாக்கி சங்க துணைத் தலைவர்கள் ரமேஷ் பட்டேல், எஸ்.சண்முகம், துணைச் செயலர் ரவி, ஆரோக்கிய சகாய அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.