மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

முருகப் பெருமானின் பக்திப்பாடல் வெளியீட்டு விழா

பழனியில் அறுமுகவேலன் என்ற தலைப்பில் முருகப் பெருமானின் பக்திப்பாடல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:26 am

பழனியில் அறுமுகவேலன் என்ற தலைப்பில் முருகப் பெருமானின் பக்திப்பாடல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.
 பழனி- திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் இதன் வெளியீட்டு விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு கந்தவிலாஸ் பாஸ்கரன் தலைமை வகித்தார். நெய்க்காரபட்டி அரிமா மாவட்டத் தலைவர் சுப்புராஜ், சூர்யா நிறுவன இயக்குநர் ஈஸ்வரசாமி,  வழக்குரைஞர் உதயக்குமார், அமமுக மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். அறுமுக வேலன் பாடல்கள் திரையிட்டு காட்டப்பட்டதைத் தொடர்ந்து சிடிக்களை கந்தவிலாஸ் பாஸ்கரன் வெளியிட்டார்.  
சவரிக்காடு உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், முருகன் படப்பாடலை தயாரித்தவருமான இயக்குநர் கிருஷ்ணகுமார் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள், திரைத்துறையினர் மற்றும் அன்னை தெரசா பிலிம்ஸ் குழுவினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.