மேற்கு வங்கத்தில் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மறுவாக்குப்பதிவு இன்று (மே 2) தொடங்கியது.
மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில், தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, மாக்ரஹாட் பாச்சிமில் 11, டைமனண்ட் ஹார்பரில் 4 என 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, இன்று (மே 2) தொடங்கிய மறுவாக்குப்பதிவு வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவுவதாகத் தெரிகிறது. இருப்பினும், பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Repolling for two Assembly constituencies in West Bengal began today (May 2).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










