மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள வேளையில், வெடிகுண்டுகள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே. 4 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை சீர்குலைக்கவும் அரசியல் கட்சிகளின் தொண்டர்களைக் குறிவைக்கவும் சமூக விரோதிகள் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இதை உறுதி செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாங்கர் பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் எனக் கூறப்படும் ஒருவரின் வீட்டிலிருந்து காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டுகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) அன்று மீட்டனர்.
தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்தும், இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்ததாக வந்த தகவல்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Summary
The Election Commission, on Tuesday (April 28), requested the National Investigation Agency (NIA) to ensure that bombs are not used on election day in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு! பல்வேறு இடங்களில் வன்முறை!!

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

